தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி கலெக்‌ஷன்ஸ்

ஆன்டிபயாடிக் ஷர்ட்

கொரோனா காலம் என்பதால் பிரத்யேகமாக ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆன்டிபயாடிக் கெமிக்கல் கொண்டு உருவாக்கப்பட்ட ஷர்ட் மற்றும் வேட்டிகள்தான் இந்த வருடம் ராம்ராஜில் ஸ்பெஷல். முப்பது வாஷ்கள் வரை இந்த ஷர்ட் செட் அணிந்து சென்றால் கொரோனா உள்ளிட்ட வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த வருட தீபாவளி ஸ்பெஷல் இதுதான். அதேபோல் டிஷர்ட் மேட்சிங்காக வேஷ்டி காம்போவும் இந்த வருடம் சிறப்பு வருகை. இதுவரை ஷர்ட்- வேஷ்டி அல்லது குர்தி - வேஷ்டிகள் வந்திருக்கின்றன. முதல்முறையாக டிஷர்ட் - வேஷ்டிகள் காம்போ.

எப்போதும் ஒரு லுங்கியோ அல்லது பெர்முடாஸோ அணிந்துதான் வீட்டில் ஆண்கள் இருப்பதுண்டு. யாரேனும் வந்தால் கூட அவ்விரண்டு உடைகளும் சற்றே போரிங் மற்றும் சோர்வான மனநிலையையே கொடுக்கும் என்பதால் டிஷர்ட் - வேஷ்டி காம்போக்களை கொண்டு வந்திருக்கிறோம். இதன் விலையும் ரூ. 895தான். பெரும்பாலும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அதற்கும் இந்த கேஷுவல் டிஷர்ட்கள் மற்றும் வேஷ்டிகள் திடீர் ஆபீஸ். வீடியோ கால்களுக்கென உடை மாற்ற தேவையில்லை. இவற்றுடன் கலர்ஃபுல் மாஸ்குகள் நல்ல தரமான காட்டன்களில் கிடைக்கின்றன.

செலஸ்டியல் கலெக்‌ஷன்

EF-IF டைமண்ட் ஜூவல்லரியின் பிரத்யேக தீம் கலெக்‌ஷன்கள் எப்போதும் சிறப்பானவை. பிளஷ் , செலஸ்டியல் , பிளாஸம், சுவே, ஈஸி ஆன் யுவர் பாக்கெட் இந்த ஐந்து கலெக்‌ஷன்கள் அடிப்படையில் சிம்பிள் வைர நகைகள். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி இளசுகளை ஈர்க்கின்றன. பிளஷ் - மாடர்ன் ஸ்டைலிஷ் பேட்டர்ன் டிசைன்களில் காதணிகள் ரூ.22,000 துவங்கி ரூ.1,15,000 வரையிலும் உள்ளன. செலஸ்டியல் என்றால் சொர்க்கம் என்று பொருள். அதாவது புனிதமான கலெக்‌ஷன்கள். ஓம், விநாயகர் போன்ற கடவுள் சார்ந்த டிசைன்கள் கொண்ட பேட்டர்ன்களில் வைர பென் டென்ட்கள் ரூ.25,000ல் துவங்கி ரூ.52,000 வரையில் கிடைக்கின்றன.  

பிளாஸம் - முழுமையாக பூக்கள் டிசைன்களில் உருவான பேட்டர்ன்களில் வைர மோதிரம், காதணிகள், நெக்லெஸ் என ரூ.10,000 துவங்கி ரூ.99,000 வரையிலும் நிறைய டிசைன்களில் உள்ளன. சுவாவே - மாடர்ன் மோதிரங்களின் கலெக்‌ஷன்கள் முறையே ரூ.12,000 முதல் ரூ.45,000 வரையில் உள்ளன. ஈஸி ஆன் யுவர் பாக்கெட் விலை குறைவான மிடில் கிளாஸ் மக்களுக்காக ரூ.8000 முதல் அதிக பட்சமாக ரூ.48,000 வரையில் காதணிகள், மோதிரம், பென்டென்ட்கள் சகிதமாக இந்த ஐந்து தீம்களில் EF-IF டைமண்ட் ஜூவல்லரியில் நிறைய கலெக்‌ஷன்கள் உள்ளன.

பைரவி பட்டுப் புடவைகள்

சென்னை சில்க்ஸ் இந்த வருட தீபாவளி சிறப்பாக பைரவி பட்டுப் புடவைகளை களமிறக்கிஉள்ளது. அதாவது மிகக் குறைந்த விலையில் கிராண்டான பட்டுப்புடவைகள். பார்ப்பதற்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரையிலும் கூட விலை இருக்குமோ என நினைக்க வைக்கும். ஆனால் இவைகளின் விலை

ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே. டிரெடிஷனல் கால புடவைகள் போல் கிளாசிக் அழகு கொடுக்கும்.

மஞ்சள் நிறத்தில் கத்தரிப்பூ நிற டிசைன்கள் கொண்ட இந்த புடவையின் விலை ரூ.10,995 மட்டுமே. விழாக்காலங்கள் துவங்கி நிச்சய தார்த்தம், நலுங்கு, மெஹெந்தி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். ரூ.7,495ல் ஊதா நிற புடவை ஆனாலும் கிராண்ட் டிசைனில் மேட்சிங்காக டெம்பிள் டிசைன் நகைகள் அணிந்தால் விழாக்கள் லுக் கொடுக்கும். இது தவிர்த்து உப்படா சில்க்ஸ், ஹாஃப் & ஹாஃப் சில்க்ஸ், ஜகா சில்க்ஸ் உள்ளிட்ட பல வெரைட்டிகள் களமிறக்கியிருக்கின்றனர்.

கேப்ரிதான் டிரெண்ட்

கொரோனா காலம் என்கிறதால் இந்த வருடம் பிரீமியம் தர லெக்கிங்ஸ்களை களமிறக்கியுள்ளனர் FW Leggings . சாதாரண லெக்கிங்ஸ்களைக் காட்டிலும் இவைகள் கனமாகவும், தரமாகவும் இருக்கும். இந்த வருடம் கேப்ரி, டிராக் மற்றும் ஆரோக்கியமான உடற்பயிற்சிக்குரிய பாட்டம்வேர்கள் நிறைய களமிறக்கியுள்ளனர். மேலும் சமீபத்திய டிரெண்ட் ஆங்கிள் லெங்த் லெக்கிங்ஸ் மற்றும் கிராப் பேன்டுகள்தான். ரூ.299 முதல் ரூ.499 வரையில் கிராப் பேன்டுகள், ஆங்கிள் லெங்த் லெக்கிங்ஸ்கள், பிரின்டட் பாட்டம் வேர்கள் என குவித்துள்ளனர். இது தவிர கலர்ஃபுல் மாஸ்குகள் நல்ல குவாலிட்டியிலும், நிறைய டிசைன்கள் மற்றும் வண்ணங்களிலும் கொண்டு வந்துள்ளனர். மேலும் காட்டன் பலாஸ்ஸோ, பட்டியாலா வகையறாக்கள் என நிறைய பாட்டம் வகைகள் களத்தில் இறங்கி உள்ளன.

விசிறி மடிப்பு புடவைகள்

எப்போதும் போத்தீஸின் சிறப்பான வசுந்தரா சில்க்ஸ். பிரத்யேகமாக போத்தீஸ் நெய்து தரக்கூடிய லைட் வெயிட் சில்க் புடவைகள். கொஞ்சம் கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் புடவைகள். இந்த வருடம் சிறப்பாக விசிறி மடிப்பு சேலைகள் களத்தில் இறங்கியுள்ளன. அதாவது வேலைக்குச் செல்லும், பெண்கள், கல்லூரி பெண்கள் என இனி பட்டுப்புடவை கட்டிக்கொள்ள யோசிக்க அவசியம் இல்லை. இந்த புடவைகள் மடிப்பு வைத்தே வரும் என்பதால் அப்படியே சுற்றி மடிப்பை மட்டும் செருகிக் கொள்ளலாம். குறிப்பாக புடவை கட்ட நேரமும் குறையும். மேலும் எங்கே மடிப்புக் கலைந்து விடுமோ என்ற பயமும் வேண்டாம். இதன் விலை

ரூ.1500 முதல் ரூ.6000 வரையென மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Related Stories:

>