தீபாவளி உலகியல்... ஆன்மிகத் தத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

*நரகாசுரனின் தாயார் தன் பிள்ளை மடிந்தவுடன், புத்திர சோகத்தினால் அழும்போது, உலகம் துக்கப்படாமல் இன்பமாய் இருக்க அவள் வேண்டிக் கொண்டதால், தீபாவளி கொண்டாடப்படுகிறது. நம்மைக் காட்டிலும், உலக நலம்தான் பெரியது என்ற ஞானத்தைக் காட்டும் பண்டிகைதான் தீபாவளி.

*தீபாவளி என்றால் தீபம் + ஆவளி. அதாவது தீபங்களை வரிசையாக வைத்து வணங்குவதாகும். இறைவனைத் தீபமாக கருதி வழிபடுவது, பண்டைய காலத்தில் இருந்தே ஏற்பட்ட மரபாகும். திருக்கோயில்களில் வழிபாட்டின் இறுதியில் தீபாராதனை செய்வது இன்று நடைபெறுகிறது.

*சிவபெருமானை நெருப்பாகவும், உமையம்மையை நெருப்பின் சூடாகவும், விநாயகரை நெருப்பின் சிவப்பு நிறமாகவும், முருகப்பெருமானை நெருப்பின்

வெளிச்சமாகவும் சைவர்கள் கருதுகிறார்கள்.

*மகாபாரதத்தில் பகாசூரனை வெற்றிக்கொண்ட பீமனுக்குத் தீப விளக்குகளைக் கையிலேந்தி பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

*தீபத்தை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபடுவது தீபாவளி பண்டிகையாகும்.

*கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள எட்டு விரதங்களில் ‘கேதார கெளரி விரதம்’ தீபாவளியைக் குறிக்கும். இதை மன்னர் பலரும் தீபாவளித் தினத்தன்று கொண்டாடி வருகிறார்கள்.

*ஆணவம் என்ற அறியாமை  இருளிலிருந்து விடுபட்டு, ‘நான்’ என்ற அகப்பற்றிலிருந்தும் ‘எனது’ என்ற புறப்பற்றிலிருந்தும் நீங்கி, இறைவனின் ஒளியாலும், அருளாலும் ஞானத்தை பெருக்கி நிலைத்த இன்பம் பெறுவதாகும்.

தொகுப்பு: சு.இலக்குமணசுவாமி, மதுரை.

அட்டைப்படம்: சுனிதா

Related Stories: