×

தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஸ்டைலிஷ் நகைகள்

டிரெண்டி உலகம், டிரெண்டி வாழ்க்கை என அணியும் தங்க நகைகளிலும் டிரெண்டியாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இக்காலப் பெண்கள். டிரெண்டி என்றாலே லைட் வெயிட் மேலும் மாடர்ன் உடைகளுக்கும் மேட்சிங்கான நகைகளாக இருக்க வேண்டும். லைட் வெயிட் நகைகள் என்றாலே ஜுவல் ஒன் நகைகள் என யாவரும் அறிந்ததே. எப்போதுமே டிரெண்டியான நகைகளைக் கொடுக்கும் ஜுவல் ஒன் இப்போது என்ன டிரெண்ட் கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘‘மொத்தம் 15 மெயின் கிளைகள். அதிலே 13 கிளைகள் தமிழ் நாட்டில் இருக்கு. எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட். முப்பது வருஷமாக நகை உருவாக்கத்திலே இருக்கும் எங்கள் கம்பெனி அதன் மூலமாகவே ஜுவல் ஒன் லைட் வெயிட் டிரெண்டி நகைகளை வருடம் தோறும் கொடுக்கிறது’’ என்கிறார் சேல்ஸ் ஹெட் அமர்நாத். ‘‘நாங்களே சொந்தமாக டிசைன் செய்வதால்தான் லைட் வெயிட் மேலும் டிரெண்டி டிசைன் எனக் கொடுக்க முடிகிறது. பெரும்பாலும் தங்க நகைகள், புடவை, சல்வார், போன்ற டிரெடிஷனல் உடைகள் கூட மட்டுமே போட்டுக்க முடியும். வேலைக்கு போகும் போது ஜீன் டாப் அல்லது ஃபார்மல் உடைகளுடனோ அல்லது பார்ட்டி கவுன்கள், காக்டெயில் உடைகள் என அணிய முடியாது.

அந்த டிரெண்டை மனதில் வைத்தே டிரெடிஷனல் நகைகளுடன் மாடர்ன் நகைகளும் டார்கெட் செய்றோம். இப்போ கூட புதுசா ஜியோமெட்ரிக் என்கிற கணக்கு தீம் ஜுவல்கள்தான் சமீபத்திய தீம். வட்டம், முக்கோணம், அறுங்கோணம் என வடிவங்களை மையமா வெச்சு புது கலெக்‌ஷன்கள் கொண்டு வந்திருக்கோம். ஆபீஸ், நண்பர்கள் சந்திப்பு இப்படி என சிம்பிள் நகைகளாக அணிய ஆசைப்படும் பெண்களை டார்கெட் செய்தே நிறைய கலெக்‌ஷன்கள் உள்ளது. நெக்லெஸ், மோதிரம், தோடு, பிரேஸ்லெட் என அனைத்தும் ஒரு பவுனில் கூட இங்கு வாங்கலாம்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED தோழி சாய்ஸ்