பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்து வந்தன. நம் பாரம்பரிய உணவுகளான இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் இனி நம்முடைய எதிர்காலம். அதில் நமக்கு மிகவும் உதவி செய்வது சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் வயதானாலும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் சிறுதானிய உணவுமுறைக்கு மாறலாம்.
சாமை
சாமையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, புரதச்சத்து நிறைந்துள்ளது. எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகளை வலிமை பெறச் செய்கிறது. மலச்சிக்கலை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளை வலுவாக்கும். தாது கெட்டிப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சாமையில் பொங்கல், உப்புமா, பிரியாணி போன்றவை செய்யலாம். சாமை நெல்லரிசி போன்றே பயன்படுத்த ஏற்றது. கைக்குத்தலாக உமி நீக்கி பயன்படுத்தும்போது இதன் நார்ச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.பனிவரகு நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பணியாரம் செய்து சாப்பிடலாம்.வரகுவரகில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும். கண் நரம்புகளுக்கு ஏற்றது. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும். செரிமான மண்டலத்துக்கு ஏற்றது. மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். நிணநீர் மண்டலத்தை வலுவாக்கும். வரகில் இட்லி, தோசை போன்றவை செய்து சாப்பிடலாம்.கேழ்வரகுஇதில் உள்ள டிரிப்டோன் எனும் அமினோ அமிலம் பசிக்கும் உணர்வை நெடுநேரம் தக்கவைத்திருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்படும். இதன் பைட்டோகெமிக்கல்சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லவை. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகின்றன. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். பால் சுரப்பை மேம்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். கேப்பையில் தோசை வார்த்துச் சாப்பிடலாம்.