×

பால் கொழுக்கட்டை

செய்முறை

கொழுக்கட்டை மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீரை மளமளவென்று கொதிக்க வைத்து அதை சிறிது சிறிதாக மாவில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்துகொள்ளவும். இரண்டாம் தேங்காய்ப்பாலை நன்றாகக் கொதிக்க விடவும். பிசைந்த மாவை கோலிக்குண்டு அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை கொதிக்கும் தேங்காய்ப்பாலில் போட்டு வேக விடவும். நன்றாக வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் பொடி போட்டு நன்றாகக் கிளறி விடவும். நாட்டுச்சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் முதல் தேங்காய்ப்பால், குங்குமப்பூ, பாதாம் பருப்பு தூவி இறக்கவும்.

Tags :
× RELATED பால் சர்பத்