போர்பான் பிஸ்கெட்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதனுடன் மைதா, கொக்கோ பவுடர், உப்பு சேர்த்து பிசையவும். மாவு கெட்டியாக இருந்தால் பாலை கொஞ்சம் கொஞ்சமாக பவுடர், உப்பு சேர்த்து பிசையவும். மாவு கெட்டியாக இருந்தால் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசையவும். மாவை திரட்டி செவ்வக வடிவில் வெட்டி மேல் பகுதியில் ஒரு போர்க்கினால் (Fork) துளைகள் போட்டு மேலே லேசாக சர்க்கரை தூவி வைக்கவும். இதை 1500C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். உள்ளே வைக்க கிரீம் செய்முறை: பொடித்த சர்க்கரை - 1/2 கப், வெண்ணெய் - 1/4 கப், கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன். பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயையும் நுரைக்க அடித்து அதனுடன் கொக்கோ பவுடர் சேர்த்து கலந்து பிஸ்கெட் நடுவில் தடவி மற்றொரு பிஸ்கெட்டை அதன்மேல் அழுத்தி சிறிது (10 நிமிடம்) நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

>