புதினா துவையல்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். அத்துடன் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின்னர் பொன்னிறமாக பருப்புகளை வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். (தேவைப்பட்டால் மட்டும் வெங்காயம்) சுவையான புதினா துவையல் தயார். இது பித்தம் நீக்கும். எல்லா சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புத்துணர்ச்சி அளிக்க வல்லது.

>