×

மணத்தக்காளி மகிமை!

* மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்து வரலாம்.

* வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.

* இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.

* களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

* மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

* கண்பார்வை தெளிவு பெறும்.

* வயிற்று நோய், வயிறு ஊபுசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

* கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்னைகள் நீங்கும்.

* மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.

* கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.

* மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

* கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.

* மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவதி

Tags : bride ,
× RELATED சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி