×

கோதுமை அல்வா

செய்முறை

கோதுமை மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அதில் 1 கப் மாவிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற விடவும். அதிலிருந்து பால் எடுத்து மாவை நன்கு கரைத்தால் வரும் பாலை வடிகட்டி அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடம் high flame-ல் வைத்து கிளறவும். மறுபக்கம் 1/2 கப் சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை கரைய விட்டுக்கொள்ளவும். இனி பால் கரைசல் கெட்டியானதும் இந்த பாகை அதில் கலந்து மேலும் மீதமுள்ள 2½ கப் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். கைவிடாமல் கிளற வேண்டும். மாவு அளவில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து சட்டியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி இறக்கினால் அல்வா ரெடி.

Tags : Alva ,
× RELATED கோதுமை ரவை கொழுக்கட்டை