கதம்ப சாதம்

செய்முறை

Advertising
Advertising

கடலைகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேக விடவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் 1 கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஊறிய கடலைகளைச் சேர்த்து வேக விடவும். அரிந்த காய்களையும் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்து குழம்புடன் சேர்ந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியினைத்தூவி இறக்கவும். வெந்து மசித்த சாதத்தினை அதில் சேர்த்து கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். பகவானுக்குப் படைப்பதற்கு ஏற்ற கதம்ப சாதம் தயார்.