×

ராகி கார இடியாப்பம்

செய்முறை

ராகி மாவு, அரிசி மாவுடன் போதுமான உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு மிக்ஸ் செய்து உருட்டி வைக்கவும். இடியாப்ப அச்சில் லேசாக எண்ணெயைத் தடவி உருட்டிய மாவைப் போட்டு, இடியாப்பமாக இட்லி தட்டின் மேல் பிழிந்து இட்லி பானையில் வேக வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், நறுக்கிய வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து, வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து தாளிப்பு கலவையுடன் நன்கு மிக்ஸ் செய்யவும்.

குறிப்பு: பாக்கெட்டில் விற்கும் ராகி மாவை தவிர்த்து, முழு ராகியை கழுவிச் சுத்தம் செய்து காய வைத்து மாவாக அரைத்து பயன்படுத்தவும்.

Tags :
× RELATED காஷ்மீர் புலாவ்