இஞ்சி குழம்பு

செய்முறை

Advertising
Advertising

முதலில் தோல் நீக்கிய இஞ்சி, பல்லாரி, பூண்டு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணைய் விட்டு கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, துவரம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் மஞ்சள் பொடி சேர்க்கவும். இத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, சாம்பார் பொடி, பெருங்காய பொடி, புளி கரைத்த தண்ணீர், வறுத்த வெந்தயப்பொடியை சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மணமுள்ள, மருத்துவ குணமுடைய இஞ்சி குழம்பு ரெடி.