பசலைக்கீரை வேர்க்கடலை டொமேட்டோ ரைஸ்

செய்முறை

அரிசியில் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து அரைப்பதம் வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில்  எண்ணெயைச் சேர்த்து, சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதங்கியதும் வரமிளகாய், தக்காளி, பசலைக்கீரை, வேக வைத்த வேர்க்கடலை சேர்த்துப் பிரட்டவும். இதனுடன் அரைப்பதம் வேக வைத்த அரிசி, தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2-3 விசில் விடவும். கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: உடலின் ஆரோக்கியத்துக்காக செய்யப்படும் சமையலில் அரிசியின் அளவை விட கீரை மற்றும் காய்கறிகளின் அளவு அதிகமாக இருந்தால் நல்லது. கூடுமானவரை பசுநெய்யைச் சேர்த்து சமைக்கவும்.