ஒரு சிறுமியும் 8 நாய்களும்!

நன்றி குங்குமம் தோழி

நாய்களை வளர்ப்பது என்பதே பலருக்கு பிரச்னையாக உள்ளது. ஆனால் 12 வயது சிறுமி ஒருவர் 8 நாய்களை  ஆட பழக்கியுள்ளார். அந்த நாய்கள் இப்போது உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பெற்றுள்ளது. இந்த வைரல் வீடியோவை இது வரை 14 லட்சம்  பேர் பார்வையிட்டுள்ளனர். 700 முறை இந்த வீடியோ  பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இந்த சிறுமியின் பெயர் அலெக்சா லவான்பர்கர் (Alexa Lauenburger). இவரது நாய்கள் ஆடிய நடனத்தின் பெயர் கோங்கா என்பதாகும். ஒன்றன் பின் ஒன்றாக நின்றபடி கால்களை தூக்கிவைத்தபடி நேர்த்தியாக நாய்கள் ஆடும் இந்த ஆட்டம் தான் அந்த நாய்களை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைத்துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் ஆடப்படும் இந்த நடனத்தை சொல்லிக்

கொடுத்து ஆடப் பழகிய அலெக்சா, ‘டேலன்ட் ஹன்ட்’ என்ற ரியால்டிஷோவில் வெற்றி வாகை சூடியவர்.

அந்த நிகழ்ச்சியில், ஒரு நாய் அலெக்சாவை பின்தொடர்ந்து ஆடியபடியே வருகிறது. மற்ற நாய்கள் அங்குள்ள சிறிய ஸ்டூல் மீது நின்று கொண்டிருக்க அவை திடீரென ஒவ்வொன்றாக இறங்கி வந்து ஜோடியாக கால்களை தூக்கிய படி நிற்க டான்ஸ் ஆடியபடி வரும் அந்த குட்டி நாய் லாவகமாக அந்த நாய்களின் கால்களுக்கு இடையே புகுந்து எந்த வித சலனமும் இன்றி செல்கிறது. இதே போல் இருபுறமும் திறந்த பாத்திரத்தை கையில் பிடித்தபடி நிற்கிறார் அலெக்சா. அப்போது அசால்ட்டாக வரும் அவரது வளர்ப்பு நாய் ஒன்று லாவகமாக அந்த பாத்திரத்துக்குள் நுழைந்து மறுபுறம் தாவிக்குதிக்கிறது. மற்றொரு முறை குதிக்கும்போது உள்ளே சிக்கிக் கொண்டுவிட்டதோ என பார்வையாளர்கள் திகைத்து நிற்க அந்த நாய் எந்தவித பிடிமானமும் இன்றி அந்த பாத்திரத்தில் லாவகமாக நிற்கிறது. ‘‘இந்த தருணம் எனது வாழ்வின் மிக உன்னதமான தருணம்’’ என்கிறார் அலெக்சா தனது செல்ல நாய்கள் எம்மா, ஜெனிபர், கேத்தி, மாயா, நலா, சப்ரினா, சாலி மற்றும் ஸ்பெக்கியை தடவியபடி.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: