×

குடை மிளகாய் பிரியாணி

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் பிரியாணி மசாலா, மிளகுத்தூள், மட்டன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் வதக்கியபின், மசாலாவுடன் சேர்க்கவும். பின் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு 20 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். சுவையான குடைமிளகாய் பிரியாணி தயார். இதனுடன் குருமா மற்றும் கெச்சப் சேர்த்து பரிமாறலாம்.

Tags :
× RELATED இனிப்பு அவல்