கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் விழா

புதுச்சேரி: புதுச்சேரி, கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழா கடந்த 28ம் தேதி கரக உற்சவத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் உள்ளிட்டோர் திருவிழாவில் பங்கேற்று சாமியை தரிசித்தனர். நேற்றிரவு முத்துப்பல்லக்கு உற்சவம் நடைபெற்ற நிலையில் இன்று செடல் உற்சவம் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இன்றிரவு சுவாமி புஷ்ப விமானத்தில் வீதியுலாயும், நாளை இளைஞர் உற்சவமும் நடக்கிறது. இதையொட்டி அங்கு போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளன. செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப்பள்ளி, இந்திராநகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மாபுரி, காந்தி நகர், தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் அரசு  உயர்நிலைப்பள்ளிகள், முத்திரையர்பாளையம் ஆயியம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி,

திலாஸ்பேட்டை பெண்கள் மற்றும் ஆண்கள் நடுநிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம், காந்தி நகர், இந்திரா நகர், குண்டுபாளையம், சொக்கநாதன்பேட், மீனாட்சிபேட், தர்மாபுரி, சாணரப்பேட்டை, தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், முத்திரையர்பாளையம், அய்யங்குட்டி பாளையம் அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 22 பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுப்பு அளிக்கப்பட்டது. சில தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தில்லையாடி வள்ளியம்மை பள்ளிக்கு நாளையும் (5ம்தேதி) கல்வித்துறை விடுப்பு அளித்துள்ளது.

Related Stories: