சுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்!

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக இம்மாதம் பள்ளிகள் திறந்து குழந்தைகள் அனைவரும் தங்களின் வகுப்பு பாடங்களை படிக்க ஆரம்பித்து இருப்பார்கள். கொரோனா தொற்றினால் உலகம் முழுதும் அனைத்து துறையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் கல்வித் துறையும் விதிவிலக்கல்ல. பெரியவர்கள் வீட்டில் இருந்த

படியே வேலை பார்க்கிறார்கள். அதே போல் குழந்தைகளும் ஆன்லைன் முறையில் கல்வி பயில ஆரம்பித்துவிட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் வகுப்புக்கு பிறகு இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதே சமயம் பெற்றோர்களாலும் அவர்களை வீட்டில் சமாளிக்க முடியவில்லை. குழந்தைகள் வீட்டில் அறிவுபூர்வமாக தங்களின் நேரங்களை செலவு செய்வதற்காகவே ஆப்கள் உள்ளன. இனி குழந்தைகள் வீட்டில் ஆக்கப்பூர்வமாக தங்களின் நேரத்தை செலவு செய்யலாம்.

எர்லி லேர்னிங் ஆப் பார் கிட்ஸ்

குழந்தைகளுக்கான ஆரம்பகால கற்றல் திறன் குறித்த ஆங்கில எழுத்துகள், ரைம்ஸ், எண்கள், விலங்குகளின் பெயர்கள், பழப் பெயர்கள்... அனைத்தும் எளிய முறையில் கற்றுக் கொள்ள இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டு முறையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். சரியான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுத்தால், குழந்தைகளும் மிகவும் விரும்பி பாடங்களை படிப்பார்கள் என்பதற்கு இந்த ஆப் மிகச்சிறந்த உதாரணம். அனைத்து குழந்தைகளையும் கவரும் வகையில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகளின் கல்வி ஆற்றல் மிகவும் வேகமாக வளர்வது மட்டும் இல்லாமல், அனைத்தையும் எளிதாக புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடங்களும் விளையாட்டு முறையில் இருப்பதால், குழந்தைகளும் அலுப்பு தட்டாமல், பாடங்களை படிப்பார்கள்.

ப்ரீ ஸ்கூல் லேர்னிங்

ப்ரீ ஸ்கூல் பள்ளி மாணவர்களுக்கு மிருகங்கள், பூக்கள், எண்கள், நிறங்கள், வடிவங்கள், காய்கறிகள், பழங்கள், மாதங்கள், வாகனங்கள் குறித்த பாடங்கள்தான் அவர்களின் பாடத்திட்டத்தில் இருக்கும். இவை எல்லாமே இந்த ஆப்பில் அவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. நம்முடைய குழந்தைகளின் மூளை பஞ்சு போன்றது. நாம் ஒரு விஷயத்தை சொன்னதும் அது உடனே பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால் அவர்களின் அறிவுப்பசி மற்றும் வயதிற்கு ஏற்ப இந்த ஆப்பில் பல பாடங்கள் இருப்பதால் அவர்கள் இலவசமாக அனைத்தையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்

* ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

* பாடங்கள் அனைத்தும் வண்ணமயமாக இருப்பதால், குழந்தைகளும் மிகவும் ஆர்வமாக பாடங்களை படிப்பார்கள்.

* விடுபட்ட எழுத்துக்கள், வினாடி வினா போன்ற செயல்திறன் இருப்பதால் குழந்தைகளின் மூளையை மேலும் பலப்படுத்தும்.

* இது தவிர உடல் பாகங்கள், பழங்கள், தினங்கள், மாதங்கள், வடிவங்கள்... இன்னும் பல இதில் குழுந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் நியாபக திறனை மேலும் பலப்படுத்தும். ப்ரீ ஸ்கூல் லேர்னிங் ஆப்பினை உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்தால் போதும். அதன் பிறகு குழந்தைகள் அவர்களே அதனை இயக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கிட்ஸ் ப்ரீ ஸ்கூல்

கிட்ஸ் ப்ரீ ஸ்கூல், உங்கள் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்ட ஒரு விளையாட்டு ஆப் என்று சொல்லலாம். விளையாட்டு என்றதும் அதில் அவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டாம். அவர்களின் வயதிற்கு ஏற்ப அனைத்து பாடங்களும் விளையாட்டு முறையில் இருப்பதால் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் என்ற கவனமே இருக்காது.

சிறப்பம்சங்கள்

* ஐந்து முதல் எட்டு வயது குழந்தைகள் எளிதாக படிக்கலாம்.

* பாடங்கள் வீடியோக்களில் வருவதால், அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும்.

* வண்ணமயமாகவும், பின்னணி இசையும் அவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக பாடங்களை படிப்பார்கள்.

* ஒவ்வொரு குழந்தைகளின் மூளை வளர்ச்சி திறன் அதிகரிக்கும் வகையில், தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு இதில் உள்ள பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மனத்திறனை அதிகரிப்பதற்கு ஏற்ப இதில் பாடங்கள் விளையாட்டு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பல புதிய விஷயங்களை அன்றாடம் கற்றுக் கொள்ள உதவுகிறது. உதாரணத்திற்கு இந்த ஆப்பினை அவர்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது லேப்டாப்பில்தான் பயன்படுத்த முடியும் என்பதால், அவர்கள் அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதையும் நாளடைவில் கற்றுக் கொள்வார்கள்.

டாட்லர் லேர்னிங் கேம்ஸ்

உங்கள் குழந்தையின் கற்றலைத் தூண்டும் வகையில் டாட்லர் லேர்னிங் ஆப் எண்ணற்ற பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. உங்கள் குழந்தைகள் ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வடிவங்கள் என 40க்கும் மேற்பட்ட பாடங்களை விளையாட்டு முறையில் இங்கு கற்றுக் கொள்ள முடியும். குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு பலதரப்பட்ட கவனச்சிதறல்கள் ஏற்படும். ஒரு பொம்மை வைத்து விளையாடுவார்கள். அடுத்த நிமிடமே வேறு ஒரு விளையாட்டு பொருட்களை நாடுவார்கள். இதனால் பெற்றோர்கள் அவர்களை ஒரே விஷயத்தில் கவனமாக இருக்க வைக்க இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகளின் கற்றல் திறனை ஒரே ஒரு டாட்லர் விளையாட்டு மூலம் கண்டறியும் படி இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் கற்றல் திறன்களை பெற்றோர்கள் சோதனை செய்வதன் மூலம், அவர்கள் எதில் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை சிறு வயதிலேயே அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுத்த முடியும். எளிமையான வினாடி வினாக்கள் மற்றும் குறுக்கு-பொருத்தம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது குழந்தைகளின் கவனம் சிதறாமல் இருக்க உதவும். இதனை பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலில் இந்த ஆப்பினை டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் எழுத்துக்கள், மிருகங்கள், எண்கள், வடிவங்கள் என பல பிரிவுகள் உள்ளன. அதில் நீங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யலாம். அதன் பிறகு அவர்களே அதனை இயக்க கற்றுக் கொள்வார்கள்.

புட் பசில் பார் கிட்ஸ்

பாடங்களை எவ்வளவுதான் குழந்தைகள் மனதில் திணிப்பது. அவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் வெறுப்பு ஏற்பட ஆரம்பிச்சிடும். அந்த வெறுப்பை போக்கதான் புட் பசில் பார் கிட்ஸ் ஆப். இதில் உள்ள 100க்கும் மேற்பட்ட புதிர் விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிலும் தேர்ச்சி அடைந்த பின் உங்களை அடுத்த விளையாட்டிற்கு எடுத்துச்செல்லும். மேலும் நீங்கள் சரியாக புதிர் விடைகளை கண்டறிந்து விட்டால், உங்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக ஊக்குவிக்கும் வாக்கியங்கள் இடம் பெறும். இதனால் குழந்தைகள் அடுத்தடுத்த புதிர்களை விளையாட ஆரம்பிப்பார்கள். இந்த புதிர்கள் எல்லாம் அவர்கள் பாடம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், விளையாடினாலும் அவர்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.

இந்த ஆப்பில் உள்ள புதிர்கள் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளன.

* மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தினை சரி செய்ய வேண்டும்.

* ஜிக்சா புதிர் விளையாட்டு.

* நினைவாற்றல் புதிர் சிறப்பம்சம்.

* ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் அதனை எளிதாக இயக்க உதவியாக இருக்கும்.

* 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இருப்பதால், நாம் விரும்பும் மொழியினை தேர்வு செய்து விளையாடலாம்.

* இவை  அனைத்துமே இலவசமாக உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

Play, Nursery, LKG, UKG Kids

நர்சரி குழந்தைகளை பொறுத்தவரை அவர்களை சமாளிப்பதுதான் பெற்றோர்களுக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். பத்து நிமிடம் அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தால் அதுவே பெரிய விஷயம். அப்படி இருக்கும் சுட்டிக் குழந்தைகளை பல செயல்திறன் மற்றும் கற்றல் வழிபாடுகள் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் ஆப் இது. இதில் நர்சரி, எல்.கே.ஜி, யு.கே.ஜி வயது குழந்தைகளுக்கு எண்கள், எழுத்துக்கள், விலங்குகள், பறவைகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள், பூக்கள், வாகனங்கள், வார நாட்கள், மாதங்கள் என பல துறை சார்ந்த பாடங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அப்புறம் என்ன... தினமும் ஒரு பாடம் என்று குழந்தைகளின் திறனை மேம்படுத்தலாமே!

தொகுப்பு: கார்த்திக் ஷண்முகம்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: