வரகரிசி தக்காளி புலாவ்

செய்முறை

சுமார் 30 நிமிடங்கள் வரகரிசியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் தோல் நீக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி, வரமிளகாய் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவை கெட்டியானதும், சுவைக்குத் தேவையான உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் பச்சை பட்டாணி, வடித்த அரிசியைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுள் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, புதினாவைச் சேர்க்கவும். சுமார் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, கலவையைக் குக்கருக்கு மாற்றவும். சுமார் 2 விசில் விட்டு அரிசியை வேக வைத்து இறக்கவும். சுவையான வரகரிசி தக்காளி புலாவ் தயார்.

குறிப்பு

* நன்கு கனிந்த தக்காளியை பயன்படுத்தவும். * இஞ்சி, பூண்டு, புதினா ஜீரணத்தை அதிகாரிக்கும்.

Tags : Varagarisi Tomato Pulau ,
× RELATED Tomato Soup