இறால் பக்கோடா

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசையவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர், வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி, அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
மொறுமொறு இறால் பக்கோடா ரெடி.

Tags :
× RELATED Tomato Soup