மகள் காதல் திருமணம்: தந்தை தற்கொலை

பெரம்பூர்: சென்னை ராஜமங்கலம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் (47). இவரது மனைவி சீதா (40). தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். கணவன், மனைவி  இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவரது மகள், 2 நாட்களுக்கு முன் மாயமானார்.

போலீசார் விசாரணையில், கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெருவை சேர்ந்த குமார் (26) என்பவரை இவரது மகள் காதலித்து, அவருடன் சென்றது தெரியவந்தது. நேற்று முன்தினம், சிறுமியை திருமணம் செய்து கொண்ட குமார், மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை  சிறுமியின் அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஐயப்பன் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: