டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை தடுப்பில் மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது

திருவொற்றியூர்: ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று, சிகிச்சை முடிந்த நோயாளியை  எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டது.  ஆம்புலன்சை   ஐயப்பன் என்ற டிரைவர் ஓட்டினார். உதவியாளர் குமரவேல்  (26)  பக்கத்தில் அமர்ந்து இருந்தார்.

எண்ணூர்  விரைவு சாலையில் திருவொற்றியூர் தாங்கல் தெரு அருகே வேகமாக சென்றபோது, ஆம்புலன்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. ஐயப்பன் மற்றும் குமரவேல் ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்  ஆம்புலன்சை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Related Stories: