முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: அட்டவணை வெளியீடு

சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி பிப்ரவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை போட்டித் தேர்வு நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி  இயக்குநர் கிரேடு-1, கணினி பயிற்றுநர் கிரேடு -1, பணியிடங்களில் புதிய நபர்களை நியமிப்பது குறித்து கடந்த 12ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டு வேளைகளில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிப்ரவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாட்களுக்கு இந்த தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அட்டவணையும் ஆசிரியர் தேர்வு  வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள முதுநிலைப்பட்டதாரிகள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் 1 மற்றும் 2, ஆசிரியர் தேர்வு வாரிய இணைய  தளமான www.trb.tn.nic.in  என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எ ழுத உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் இருந்து தங்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி அறிவிக்கப்படும். ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணை கொரோனா பெருந்தொற்று மற்றும் நிர்வாக காரணங்களை பொருத்து மாறுதலுக்கு உட்பட்டது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories: