தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு ரூ.2 கோடி நன்கொடை: தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் தகவல்

சென்னை, ஜன. 29: தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2 கோடியை நன்கொடையாக 2 பக்தர்கள் தலா ஒரு கோடி வீதம் வழங்கியதாக தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தெரிவித்தார். சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தான கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கூட்டம் அலைமோதும். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலுக்கு தானமாக தங்கம், வெள்ளி நகை போன்ற பொருட்களை வழங்குகின்றனர். அதேபோன்று கோயிலின் வளர்ச்சிக்காகவும் நன்கொடையாகவும் பக்தர்கள் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்த நிதியை கொண்டு கோயில்கள் சார்பில் பல்வேறு திட்டத்துக்காக செலவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதா பாரிரக்‌ஷனா அறக்கட்டளைக்கு பக்தர் ஒருவர் ரூ.1 கோடியும், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்காக முனி ஸ்ரீனிவாசலு ரெட்டி  என்ற தொழில் அதிபர் ரூ.1 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை  அவர்கள் சென்னை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் நன்கொடையாளர்கள் வழங்கினர் என்று திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜெ. சேகர் தெரிவித்தார்.

Related Stories: