மேற்கூரை அமைத்தபோது தவறிவிழுந்து தனியார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர் பலி

கும்மிடிப்பூண்டி: மேற்கூரை அமைத்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தனியார் ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இங்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பலராமன்(42) மேற்கூரை அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கூரை அமைக்கும் பணியின்போது பலராமன் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். புகாரின்படி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த ஊழியரின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த அந்நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சசிகுமார், மனோகர் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories: