நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சி கூட்டம்

மாமல்லபுரம்: தமிழகத்தில் அடுத்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதைதொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது. இதில் திமுக, அதிமுக, விசிக, மதிமுக  உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ஒருவர் மட்டுமே உடன் இருக்க வேண்டும்.

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு உட்பட்டு எந்த அரசியல் கூட்டங்களும் நடத்த கூடாது. பிரசாரத்துக்கு செல்லும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: