புதுப்பட்டினம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல்

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் அரசு பள்ளிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ₹1 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமை தாங்கினார். அணுமின் நிலைய சமூக பொறுப்பு குழு தலைவர் சுபா மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை அணுமின் நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி கலந்து கொண்டு, புதிய பள்ளி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதில், அணுமின் நிலைய மனிதவள துணை பொதுமேலாளர் சுவர்ணா சதீஷ், மனிதவள மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: