மநீம 3ம்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3ம் கட்ட வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (154 வேட்பாளர்கள்) மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ‘நேர்மையும் திறமையும் கொண்ட இவர்களை வெற்றி பெற செய்யுங்கள்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: