கோவை கலெக்டருக்கு கொரோனா

கோவை: கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன். இவருக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பத உறுதியானது. இதையடுத்து கலெக்டர் முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: