சென்னை மாநகராட்சி தேர்தல்; எஸ்டிபிஐ 50 இடங்களில் போட்டி: முதல் கட்ட வார்டு பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் முதற்கட்டமாக போட்டியிடும் 50 வார்டுகள் பட்டியலை எஸ்.டி.பி‌.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வடசென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் தொகுதியில் 34, 35, 36, 37வது வார்டுகள், திரு.வி.க. நகர் தொகுதியில் 73, 75, 71வது வார்டுகள், கொளத்தூர் தொகுதியில் 68வது வார்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடசென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ராயபுரம் தொகுதியில் 48, 49, 50, 51, 52, 53வது வார்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் 38, 47வது வார்டுகள், திருவொற்றியூர் தொகுதியில் 14வது வார்டு, துறைமுகம் தொகுதியில் 55, 56, 60வது வார்டுகள், எழும்பூர் தொகுதியில் 61வது வார்டு, வில்லிவாக்கம் தொகுதியில் 94வது வார்டு, சேப்பாக்கம் தொகுதியில் 63, 114, 115, 116வது வார்டுகள், அண்ணாநகர் தொகுதியில் 105, 107வது வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர் தொகுதியில் 160, 161, 163வது வார்டுகள், வேளச்சேரி தொகுதியில் 173, 175, 176, 178, சைதாப்பேட்டை தொகுதியில் 172, சோழிங்கநல்லூர் தொகுதியில் 185, 190, 195, 196, 197, 200வது வார்டுகள், மயிலாப்பூர் தொகுதியில் 125வது வார்டு, விருகம்பாக்கம் தொகுதியில் 128வது வார்டு, அம்பத்தூர் தொகுதியில் 80, 82, 86, 87, 93வது வார்டுகள், மாதவரம் தொகுதியில் 22வது வார்டிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: