13 கவுன்சிலர்களில் 11 பேர் ஆதரவு; குஜிலியம்பாறை யூனியன் அதிமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: திமுகவை சேர்ந்தவர் தலைவராக வாய்ப்பு

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுக - 6, திமுக - 3, தேமுதிக - 1, மதிமுக - 1, சுயேச்சை - 2 என 13 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி இருந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரபட்டது. இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிமுக யூனியன் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் கூட்டம் பழநி ஆர்டிஓ சிவக்குமார் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் நடந்தது. இதில், 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டனர். இதையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக பழநி ஆர்டிஓ சிவக்குமார் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த ஒருவர் யூனியன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: