டெல்லியில் தியேட்டர்கள் திறப்பு

புதுடெல்லி: டெல்லியில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் டெல்லியிலுள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் இந்தி படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது. பல புதிய இந்தி படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள சினிமா தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: