×

கண்களை தோண்டி எடுத்து 2 சிறுவர்கள் படுகொலை

பகூர்: ஜார்கண்ட் மாநிலத்தின் பகூர் மாவட்டத்திற்குட்பட்ட அம்பாதித் கிராமத்தை சேர்ந்தவர்கள் 12வயது சிறுமி, 10 வயது சிறுவன். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களை அவரது உறவினர் நேற்று முன்தினம் மாலை அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் வயலில் இருவரும் கண்கள் முகத்தில் இருந்து நோண்டி எடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் சிறுவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக சிறுவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : 2 boys murdered for digging eyes out
× RELATED தஞ்சை அருகே களிமேடு பகுதியில்...