ஆஸி. ஓபன் பைனலில்: நடால் - மெட்வதேவ் பலப்பரீட்சை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவ் மோதுகிறார். அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் நேற்று மோதிய நடால் (35 வயது, 6வது ரேங்க்) 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 6வது முறையாக ஆஸி. ஓபன் பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 55 நிமிடத்துக்கு நீடித்தது. நடால் 2009ல் இங்கு சாம்பியன் பட்டம் வென்றுளார்.

மற்றொரு அரையிறுதியில் ரஷ்ய வீரர் மெட்வதேவ் (25 வயது, 2 வது ரேங்க்) 7-6 (7-5), 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தினார். நாளை நடைபெறும் பைனலில் நடால் - மெட்வதேவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று பெடரர், நடால், ஜோகோவிச் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: