×

ஆந்திராவில் நிலத் தகராறில் பயங்கரம்: 2 பேர் வெட்டி கொலை

திருமலை: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் நிலத்தகராறில் வெட்டி  கொலை செய்யப்பட்டனர். இது குறித்து எஸ்பி சுதீர்குமார் கூறியதாவது: கர்னூல் மாவட்டம், காமாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வட்டே மல்லிகார்ஜூனா. அதேபகுதியை சேர்ந்தவர் போயா முனேந்திரா. இவர்களுக்கு இடையே கடந்த 22 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மல்லிகார்ஜூனா பாஜ.வையும், முனேந்திரா ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசையும் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் தொடர்பாக முனேந்திரா ஆளும் கட்சி தலைவர் மகேந்திராவை அணுகி ஆதரவை கோரினார்.

இப்பிரச்னையை தீர்க்க  சிலர் மல்லிகார்ஜூனா வீட்டுக்கு சென்றனர். மல்லிகார்ஜூனாவும், அவரது குடும்பத்தினரும் இவர்கள் மீது ஏற்கனவே வீட்டில் வைத்திருந்த ஆசிட் கலந்த பெட்ரோலை தெளித்தும், மிளகாய் பொடிகளை தூவியுள்ளனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் சிவப்பா, ஈரண்ணா ஆகிய 2 பேர் உயிரிழந்தார். தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Andhra Pradesh , Terror in land dispute in Andhra Pradesh: 2 hacked to death
× RELATED ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு...