நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் விவசாயிகள் பிரச்னையை கிளப்ப காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்ட தொடர் நாளை மறுநாள் துவங்குகிறது. முதல் நாள் நடக்கும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில்,  முக்கிய பிரச்னைகளை எழுப்பும் விதத்தில் அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டம்  நேற்று நடந்தது. காணொலி வாயிலாக நடந்த கூட்டத்துக்கு   சோனியா காந்தி தலைமை வகித்தார்.

 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   விவசாயிகள் பிரச்னை, சீனாவுடன் எல்லை பிரச்னை, கொரோனாவுக்கு பலியானவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது மற்றும் ஏர் இந்தியாவை டாடா குழுமத்துக்கு விற்றது போன்ற பல்வேறு பிரச்னைகளை பட்ஜெட் தொடரில் எழுப்புவது என  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: