நாடாளுமன்ற நடவடிக்கையை டிஜிட்டல் ஆப்பில் பார்க்கலாம்: மக்களவை சபாநாயகர் தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளை 2 தொலைக்காட்சி சேனல்கள் தனித்தனியாக ஒளிபரப்பி வந்தன. தற்போது அவை ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே  சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நேரடியாக செல்போனில் காண்பதற்காக ‘சன்சாத் டிஜிட்டல் ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பார்வையிட்டார்.

பின்னர், அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `இந்தியாவின் கிராமப் புறங்களிலும் கூட டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் வடிவில் ஒளிபரப்பாக உள்ளன. இந்த நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலைக் கூட பொதுமக்கள் தங்களது மொபைலில் நேரலையில் காணலாம்,’ என கூறியுள்ளார்.

Related Stories: