70 ஆண்டுகளாக ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை: 83 வயதிலும் வேலைக்கு செல்லும் முதியவர்

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரெய்ன் சோர்லே (83). இவர் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 1953ம் ஆண்டு தனது 15 வயதில், சோமர்செட் பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் பகுதி நேர வேலையில் சேர்ந்தார். வாரத்துக்கு 45 மணி நேரம் வேலை செய்த பிரெய்னுக்கு 2 பவுண்ட் (ரூ.200) சம்பளம் கிடைத்தது. குடும்ப வறுமை காரணமாக அங்கேயே முழு நேர பணியில் சேர்ந்துள்ளார். பின்னர், அந்த கம்பெனி ஷாப்பிங்  மாலாக மாற்றப்பட்டு, 1993ம் ஆண்டு திறக்கப்பட்டது.

பிரெயின் மீண்டும் அங்கேயே தனது பணியை தொடர்ந்து வருகின்றார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி காணாமல் போனார். ஆனால், வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்காமல் தொடர்ந்து தனது 83 வயதிலும் வேலைக்கு செல்கிறார். இதில், ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 70 ஆண்டு கால பணியில் இவர் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை என்பது தான்.  இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் எனது வழியில் மக்களுக்கு நல்ல சேவையை வழங்குகிறேன்,” என்றார்.

Related Stories: