×

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி; 28,156 பேர் டிஸ்சார்ஜ்; 48 பேர் உயிரிழப்பு!

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.06 மேல் அதிகரித்துள்ளது. 4.92 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 26,533 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,579 பேர் ஆண்கள், 10,954 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 79 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து  863 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 331 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளார். 24 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 24 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து  156 ஆக அதிகரித்துள்ளது. இன்று 28,156 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona confirms 26,533 people in one day in Tamil Nadu today; 28,156 discharged; 48 killed!
× RELATED இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு...