லெஜன்ட்ஸ் லீக் தொடர்; இந்திய மகாராஜா மீண்டும் தோல்வி.! பைனல் வாய்ப்பை இழந்தது

அல் அமராத்: முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், ஓமனில் நடந்து வருகிறது. இதில் இந்திய மகாராஜா, ஆசிய லைன்ஸ், வேல்ட் ஜெய்ன்ட்ஸ் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். இதில் முதல் 2 இடம்பிடிக்கும் அணி பைனலுக்கு தகுதி பெறும். இந்திய மகாராஜா முதல் போட்டியில், ஆசிய லைன்சை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் வேல்ட் ஜெய்ன்ட்ஸ். 3வது போட்டியில், ஆசிய லைன்ஸ் அணியிடம் வீழ்ந்தது.நேற்று கடைசி போட்டியில் வேல்ட் ஜெய்ன்ட்ஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற இந்திய மகாராஜா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வேல்ட் ஜெய்ன்ட்ஸ், 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கிப்ஸ் 89 ரன் (46பந்து) அடித்தார். பின்னர் களம் இறங்கிய இந்திய மகாராஜா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களே எடுத்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வேல்ட் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. மகாராஜா அணியில் நமன் ஓஜா 95 (51 பந்து), இர்பான்பதான் 56 (21பந்து) ரன் எடுத்தனர். லீக் சுற்று முடிவில் வேல்ட்ஜெய்ன்ட்ஸ் 3, ஆசிய லைன்ஸ் 2 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறின. நாளை இரு அணிகளும் பைனலில் மோதுகின்றன.

Related Stories: