ஓட்டி பார்த்த போது விபரீதம் டிராக்டர் வாய்க்காலில் கவிழ்ந்து சிறுவன் பலி-திருவாரூர் அருகே பரிதாபம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் அருகே டிராக்டர் ஓட்டி பார்த்த போது வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சதீஷ்பாபு. இவரது மகன் சசிகுமார்(15). 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தெற்கு பாமணியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்காக சென்றுள்ளார்.

நேற்று மாலை வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில் ஏறி, டிராக்டரில சாவியிருந்ததை பார்த்து ஸ்டார்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் அருகே இருந்த தெற்கு பாமணி கொல்லி திடல் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் சசிகுமார் டிராக்டர் அடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.  தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: