திண்டுக்கல்லில் பாகற்காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை

திண்டுக்கல் :திண்டுக்கல் பகுதிகளில் பாகற்காய் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திண்டுக்கல் அருகே ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ‌கசவனம்பட்டி, மேல் திப்பம்பட்டி, கரட்டுப்பட்டி, குஞ்சனம்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மைலாப்பூர் போன்ற பகுதிகளில் வெங்காயம், பாகற்காய், பச்சை மிளகாய், அவரக்காய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய் ஆகிய காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றது.

 இந்நிலையில், கரட்டுப்பட்டி பகுதியில் ‌சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60 ஆயிரம் செலவில் பாகற்காய் நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த கார்த்திகை மார்கழி மாதங்களில் 60 முதல் 80 வரை ஒரு கிலோ பாவக்காய் விற்பனையானது. ஆனால், தற்போது பாகற்காய் அதிக வரத்து உள்ளதால் விலை குறைந்துள்ளது.

கரட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் கூறுகையில், தற்பொழுது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பாகற்காய் சாகுபடி செய்து உள்ளேன். கடந்த புரட்டாசி மாதத்தில் நடவு செய்து தற்போது கார்த்திகை, மார்கழி மாதங்களில் 60 முதல் 80 ரூபாய்க்கு விற்ற பாகற்காய் தற்போது 20 ரூபாய்க்கு விலை போகின்றது. மேலும், பாகற்காயை பறிப்பதற்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கூலி ஆட்களுக்கு கொடுக்கின்றோம். ஆனால் அந்தக் கூலி கூட கிடைக்கவில்லை, என்றார்.

Related Stories: