அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை ஆட்சியர் ரமண சரஸ்வதி திறந்துவைத்தார். சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் தற்போது 208 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளது. 5,080 ஏக்கர் பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 52 நாட்களுக்கு சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: