கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சம் பழம் பறிப்பு தீவிரம்-விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை

வருசநாடு : கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சம் பழம் பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, நரியூத்து, தும்மக்குண்டு, காந்திகிராமம், அரசரடி, வெள்ளிமலை, ஆகிய பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி நடந்து வருகிறது.

இப்பகுதியில் தற்போது எலுமிச்சம் பழம் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் தோட்டங்களுக்கே வந்து கிலோ ரூ.23 முதல் 25 வரை கொள்முதல் செய்கின்றனர். மேலும், ஆண்டிபட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், சின்னமனூர், கம்பம் ஆகிய ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சை பழம் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வரத்தும் குறைவாக உள்ளது. இன்னும் சில தினங்களில் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Stories: