பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் நிர்பந்திக்கின்றனர்; நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்: தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஊர்மக்கள் புகார்

தஞ்சை: கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என  தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மைக்கேல்பட்டி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில் தான் படித்தனர், அதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்திக்கின்றனர் என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்தனர்.

ஒருதரப்பினருக்கு ஆதரவாக சொல்லி சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்தம் செய்கின்றனர் என ஊர்மக்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் யாரும் எங்கள் பகுதிக்கு வரக்கூடாது அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர். நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம், மதமாற்றம் என்ற பிரச்சனையே எழவில்லை என கிராம மக்கள் பேட்டியளித்தனர்.

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்த விவகாரத்தை சிலர் அரசியர் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டினர். தற்கொலைக்கு மதம் மாற்றம் தான் காரணம் என எங்களை வற்புறுத்தி கூற சொல்கிறார்கள் எனவும் கூறினர். ஆகவே இந்த தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற புகார் போலி என்பது நேற்று அம்பலமானது.

Related Stories: