கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு விற்பனையும் உயர்ந்தது

ஈரோடு :  ஈரோடு  மாட்டு சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்ததோடு விற்பனையும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையானது கடந்த சில வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் விரைவில் கோடை காலம் தொடங்க உள்ளதால் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதே போல வெளிமாவட்ட வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறியதாவது, கடந்த 4 வாரங்களாக மாடுகளின் வரத்து குறைவாக காணப்பட்டது. இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. 600 மாடுகள்,300 எருமை,250 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்துள்ளனர். வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரம் நடந்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ளதால் இன்னும் 3 மாதங்களுக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் வரத்து அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.

Related Stories: