எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில்தான் படித்தனர்; இதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை: கிராம மக்கள் பேட்டி

தஞ்சை: எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில்தான் படித்தனர்; இதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிராம மக்கள் இதனை தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து கேட்கின்றனர்; கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி நடக்கிறது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: