நெல்லை, தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினவிழா

நெல்லை : நெல்லை தென்காசி மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றி வைத்தார். நகராட்சி பொறியாளர் ஸ்டான்லிஜெபசிங், உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் அல்லி பாத்திமா, இளநிலை உதவியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சிவா, தூய்மை இந்தியா பணியாளர்கள் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ் கொடியேற்றி வைத்தார். யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலபாண்டியன், கீதா மணிகண்டன், சிங்கிலிபட்டி மணிகண்டன், பகவதியப்பன், மாரிச்செல்வி, சண்முகையா, சித்ரா,ரோஜா கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் நியூ கேம்பிரிட்ஜ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் நிஹ்மத் தேசிய கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் அக்பர்அலி, பள்ளி இயக்குநர் காதர்முகைதீன், முதல்வர் அலமேலு பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்பயிற்சி ஆசிரியர் கலையரசன் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தார்.கிருஷ்ணாபுரம் பிரில்லியண்ட் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் அப்துல்காதர் தேசியக்கொடியேற்றினார். ஆசிய நாடுகளின் பெயர்கள், இந்திய மாநிலங்கள் அதன் தலைநகரங்களை 26 நொடிகளில் சொல்லி உலக சாதனை படைத்த 4ம் வகுப்பு மாணவர் சித்தார்த்திற்கு பள்ளி முதல்வர் செந்தில்நாதன் பரிசுகளை வழங்கினார்.

அம்பை: அம்பை யூனியன் அலுவலகத்தில் சேர்மன் பரணிசேகர் தேசிய கொடியேற்றினார்.

இதில் பிடிஓ குமரன், துணைசேர்மன் ஞானக்கனி, திமுக வர்த்தக அணி அமைப்பாளர் பண்ணை முருகன், விகேபுரம் நகர மாணவரணி ஜேப்பி, வக்கீல் பாலா, வெள்ளங்குளி கண்ணன் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அம்பை நகராட்சியில் ஆணையாளர் பார்கவி தேசிய கொடியேற்றினார்.இதில் மேலாளர் மணி, சுகாதார ஆய்வாளர் சிவசிதம்பரம் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

 அம்பை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் திமுக நகரச் செயலாளர் பிரபாகரன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் அமைப்பு சாரா தொமுச தலைவர் வனராஜ், முத்துதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜமீன்சிங்கம்பட்டி கிங் ஜார்ஜ் தொடக்கப்பள்ளியில் அம்பை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வக்கீல் காந்திமதிநாதன் தேசிய கொடியேற்றினார். சாட்டுப்பத்து ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் சாரதா சுப்பிரமணியன் கொடியேற்றினார். இதில் திமுக பிரமுகர் சுப்பிரமணியன், கிளைச்செயலாளர் பிரபு, மாணவரணி அமைப்பாளர் சஞ்சய் செல்வம் பங்கேற்றனர்.

 கல்லிடைக்குறிச்சி நகர கூட்டுறவு வங்கியில் தலைவர் சந்தானம், பேரூராட்சி அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியம், தியாகிகள் திடலில் காங்கிரஸ் கைக்கொண்டான், காக்கநல்லூர் பள்ளியில் நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் தேசிய கொடியேற்றினர். கல்லிடைக்குறிச்சியில் பள்ளிவாசல்கள் முன் ஜமாத்தார் தேசிய கொடியேற்றினர். இதேபோல் மணிமுத்தாறு, வைராவிகுளம், அயன்சிங்கம்பட்டி, மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைக்குளம், அயன் திருவாலீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நாங்குநேரி:  நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் கோமதி தேசிய கொடியேற்றினார்.

இதில் மண்டல துணை தாசில்தார் சண்முகசுந்தரம், ஆர்ஐ ஐயப்பன், உதவியாளர்கள் வானமாமலை, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்குநேரி பார்ஸ்டல் சிறைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி கைதிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் ேசர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின்  தேசிய கொடியேற்றினார். இதில் ஆணையாளர் கிஷோர்குமார், கோமதி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சஜன்மேத்யூ தேசிய கொடியேற்றினார்.

நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஆழ்வாநேரி  சீனிதாஸ், சிங்கநேரி முத்துச்சொர்ணம் சண்முகசுந்தரம், இறப்புவாரி மோகனாயோசுவா, அரியகுளம் சுப்புலட்சுமி வசந்தகுமார், தெற்கு நாங்குநேரி சகுந்தலா, மறுகால்குறிச்சி சாந்தகுமாரி செல்லையா, பூலம் முத்துச்செல்வி, கரந்தாநேரி செந்தில், பருத்திபாடு ஊசிக்காட்டான், செண்பகராமநல்லூர் முருகம்மாள் சிவன்பாண்டி, பாப்பாங்குளம் முருகன் ஆகியோர் அந்தந்த ஊராட்சியில் தேசியக் கொடியேற்றினர்.

களக்காடு: கடம்போடுவாழ்வு ஊராட்சி  ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் ஒன்றிய  திமுக செயலாளர் செல்வகருணாநிதி தேசிய கொடியேற்றினார். கடம்போடுவாழ்வு பஞ்சாயத்து தலைவர் உச்சிமாகாளி   அண்ணாதுரை, தலைமைஆசிரியர் பாஸ்கர்,  ஆசிரியை லீனா, பஞ்சாயத்து செயலாளர் ஆனந்த்  உள்ளிட்ேடார்  பங்கேற்றனர்.சுரண்டை :  வீராணம் ஊராட்சி ஒன்றியத்தில் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் நெல் வீரபாண்டியன் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜமீலா பிபி,முன்னாள் துணைத் தலைவர் மகாராஜன், வீராணம் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி தாளாளர் சிந்தா மதார் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மாரிச்செல்வம்,பிரியா,மாரியப்பன், சாகுல் ஹமீது,ஹனிபா,ஞானதாஸ், பிரபுதேவா,அமானுல்லா, ஜெயலட்சுமி,ராஜா ராம்குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பணகுடி:  பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் பேரூராட்சி மேற்பார்வையாளர் சசிகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

காவல்கிணறு ஊராட்சியில் தலைவர் இந்திரா ஷம்பு, துணைத்தலைவர் மாம்பழ சுயம்பு தேசிய கொடியேற்றினர். வடக்கன்குளம் ஊராட்சியில் தலைவர் ஜான் கென்னடி தேசிய

கொடியேற்றினார். இதில் உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நெல்லை:  குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசுதின விழாவில் தலைமை ஆசிரியை தாயம்மாள் ராணி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

வி.கே.புரம்: அடையக்கருங்குளத்தில் உள்ள அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் நடத்தி வரும் மாற்றுத்திறனாளி பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தென்பொதிகை டிரஸ்டின் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் நிர்வாகி ஜெயப்பிரகாஷ். செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கடையம்:  தெற்குகடையம் ஊராட்சியில் முதல் பெண் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பழனியப்பன் ,துணைத் தலைவர் மகாலிங்கம் மற்றும்  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடையம் யூனியனுக்கு  உட்பட்ட  வெங்கடாம்பட்டி ஊராட்சியில் நடந்த  குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி கொடி ஏற்றினார்.இதில் வார்டு உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் ,ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் எம்பி ராமசுப்பு சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து  தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் தங்கசெல்வம், பொதுச்செயலாளர் அருமைநாயகம், வட்டார தலைவர் அலெக்சாண்டர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின், முன்னாள் கவுன்சிலர் அருணாசலம், துணை செயலாளர் இயேசு ராஜா, விமல் லிவிங்ஸ்டன், காசி பெருமான், பால்ராஜ், காளத்திமடம் பசுங்கிளி, ராஜேந்திரன், செல்லமணி, சுந்தரம், சாமுவேல் துரை, தர்மராஜ், ஜோசப் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிவகிரி: வாசுதேவநல்லூர் யூனியனில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து அலுவலகத்தில் காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தினார். விழாவில் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், வேலம்மாள், மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணைசேர்மன் சந்திரமோகன், கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், செல்வி, சரஸ்வதி, ஜெயராம், அருணாதேவி,  விமலா, மகாலட்சுமி திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாடசாமி, மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூர் செயலாளர் சரவணன், அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் அணி பொன்ராஜ், விவசாய அணி மனோகரன், இளைஞரணி சரவணக்குமார், மாணவரணி சுந்தரவடிவேலு, முனீஸ்வரன், மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், புளியங்குடி நகர செயலாளர் ஜாகீர்உசேன், நிர்வாக அலுவலர் கருத்தப்பாண்டியன், தணிக்கைக்குழு ராமநாதன் உதவி பொறியாளர் மார்க்கோனி, ஒன்றிய பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: