நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: அபராதம் வசூலிக்க இடைக்கால தடை; வணிக வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும் வரை வரை அபராதம் தொடர்பாக வணிக வரித்துறை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்ககூடாது என கூறியுள்ளது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அதிகப்படடியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400% அளவிற்கு வணிக வரித்துறை அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த கார் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ரூ.63 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.7.98 லட்சம் நுழைவு வரி செலுத்த முதலில் மறுத்து பின் செலுத்தியுள்ளார். தாமதித்ததால் 400% அபராதமாக ரூ.30.23 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories: