பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காட்டில் காளையர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 200 காளைகள்-பார்வையாளர்கள் உற்சாகம்

பள்ளிகொண்டா :  பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காட்டில் காளையர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்தோடிய 200 காளைகளை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காட்டில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. காலை 10.50 மணிக்கு தாசில்தார்கள் விநாயகமூர்த்தி, குமார், விஜயகுமார்  ஆகியோர் முன்னிலையில் ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய காளை விடும் திருவிழாவிற்கான உறுதிமொழியினை எடுத்துகொண்டனர். ஆர்டிஓ விஷ்ணுபிரியா மாடுவிடும் விழாவினை ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகள் கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் காளைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்ேதாடின. இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. இதில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த 51 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ₹55,555, 2வது பரிசுஇரண்டாவது பரிசாக ₹45,555, மூன்றாவது பரிசாக ₹35,555 வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர, 2 ஆம்புலன்ஸ் வாகனமும், தீயணைப்பு வண்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

காளைவிடும் திருவிழாவின் போது அந்த  பகுதி சுற்றியுள்ள 200 மீட்டர் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.  ஆனால் குடிமகன்கள் ஒருநாள் முன்னதாகவே மது பாட்டில்களை வாங்கி  வைத்துக்கொண்டு, போதையில் மாடுவிடும் விழாவிற்கு வருவதாக புகார்கள் உள்ளது.  ஒரு சிலர் தெருக்களிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு, பங்கேற்றனர். இதனால்  தான் மாடுவிடும் விழாவில் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று ெபாதுமக்கள்  ேவதனை தெரிவிக்கின்றனர்.

ஏரியில் விழுந்த காளையை காப்பாற்றிய வாலிபர்கள்

விழாவில் இலக்கை அடைய சீறிப்பாய்ந்தோடிய ஒரு காளை அருகிலுள்ள ஏரியில் விழுந்தது. உடனடியாக அந்த காளையை காப்பாற்ற 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஏரியில் குதித்தனர். சிறிது நேரம் போராடி காளையை மீட்டனர். அதில், ஒரு வாலிபர் திடீரென பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக சக இளைஞர்கள் அந்த வாலிபரை காப்பாற்றி, மருத்துவ சிகிச்சைக்காக முகாமிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

Related Stories: