நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையைில் அண்ணா அறிவாயலத்தில் ஆலோசனை: முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயம் வருகிறார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தமிழக வாழ்வுரிமை கட்சி வலுவாக உள்ள இடங்களில் போட்டியிட முதல்வரிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் த.வா.க. தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் இன்று தொடங்கியது.

Related Stories: